
சாமை கொள்ளுப் பொங்கல்
தேவை:
சாமை – 300 கிராம்
கொள்ளு – 50 கிராம்
சீரகம், மிளகு, இஞ்சித் துருவல் – தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளுப் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவிடவும். சாமையை இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் ஏற்றவும். இதில் நெய், எண்ணெய்விட்டு சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். இதனுடன் ஒரு பங்கு சாமைக்கு மூன்று பங்கு என்கிற அளவில் தண்ணீரைச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த சாமை, வேகவைத்த கொள்ளைச் சேர்த்து, குக்கரை மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ருசியான சாமை கொள்ளுப் பொங்கல் தயார்.