
தினைப் பாயாசம்
தேவையான பொருட்கள்:
தினை – 200 கிராம்,
பாசிப்பருப்பு – 100 கிராம்,
வெல்லம் – 300 கிராம் (பொடிக்கவும்), தேங்காய்ப்பால் – ஒரு கப்,
முந்திரிப்பருப்பு,திராட்சை-தேவைக்கேற்ப,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இதைத் தினையுடன் சேர்த்து அரை லிட்டர் தண்ணீர்விட்டு குக்கரில் குழைய வேகவிடவும். பிறகு வேகவைத்த தினைக் கலவையுடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும். வெல்லம் நன்கு கரைந்தவுடன் கொஞ்சம் தண்ணீரை இதனுடன் சேர்த்து பாயாசப் பதத்துக்குக் கொண்டுவந்து மறுபடியும் கொதிக்கவிடவும். பிறகு நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து இதனுடன் சேர்க்கவும். பின்னர் தேங்காய்ப்பால் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து மறுபடியும் ஒரு கொதிவிட்டு இறக்கவும். சத்தான, சுவையான தினை பாயாசம் ரெடி.