பாடலாசிரியராக மாறிய சிவகார்த்திகேயன்

சினி நியூஸ் சினிமா

siva nayan - 2026கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது நண்பரும் பிரபல பாடகருமான அருண்காமராஜ் இயக்கும் படம் ஒன்றை தயாரித்து வருகிரார் என்பது தெரிந்ததே. நடிகர், தயாரிப்பாளரை அடுத்து தற்போது பாடலாசிரியராகவும் அவர் மாறியுள்ளார்.

ஆம், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் கோலமாவு கோகிலா’ படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை சிவகார்த்திகேயன் எழுதியுளார். இந்த பாடல் ‘எனக்கு இப்ப கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி’ என்று தொடங்குவதாகவும், இந்த பாடல் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்றை அனிருத் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனிருத் பாடலுக்கான மெட்டை சொல்ல, அதற்கு தகுந்த வரிகளை சிவகார்த்திகேயன் சொல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்து வருகின்றனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வரும் இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.