
பனானா – ஐஸ்க்ரீம் டிலைட்
தேவையானவை:
வாழைப்பழம் – ஒன்று,
பால் – ஒரு கப்,
ஐஸ்க்ரீம் – ஒரு கப்,
சர்க்கரை – 5 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக்கவும். இதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், சர்க்கரை, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். இதை கிண்ணத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். பரிமாறும்போது இதன் மீது சிறிதளவு ஐஸ்க்ரீம் போட்டு பரிமாறவும்.