
மைதா பக்கோடா
தேவையானவை:
மைதா – ஒரு கப்,
கடலை மாவு, அரிசி மாவு – தலா அரை கப்,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் -4
வெங்காயம் – ஒன்று
இஞ்சி – சிறு துண்டு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
மைதா மாவை ஆவியில் வேகவிடவும். இதனுடன் கடலை மாவு அரிசி மாவு, இஞ்சித் துருவல், உப்பு, வெண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் பிசிறவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, பிசிறிய மாவில் இருந்து சிறிது சிறிதாக எடுத்து பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.