நள்ளிரவில் அத்திவரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்

Published:

rajini athivarathar7 - 2026

காஞ்சிபுரம்: காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். அத்தி வரதர் தரிசனம் நிறைவு பெற இன்னும் இரு தினங்களே உள்ளன. வரும் அக். 17ஆம் தேதியுடன் தரிசனம் நிறைவு பெற்று அத்திவரதர் பெருமான் அனந்தசரஸ் திருக்குளத்துள் மீண்டும் எழுந்தருளுகிறார்.

இந்நிலையில் நள்ளிரவில் அத்திவரதரை நடிகர் ரஜினி தரிசனம் செய்தார். நேற்று நள்ளிரவில் நடிகர் ரஜினி, மனைவி லதாவுடன் அத்திவரதரை தரிசித்தார். அப்போது சற்று நேரம் பொதுமக்கள் தரிசனம் பாதிக்கப் பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனைவி லதா, தனது மகள் ஐஸ்வர்யா, குழந்தையுடன் அத்தி வரதரை தரிசித்தார்! இப்போது ரஜினிகாந்த் வந்து தரிசித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img