ஹிந்து மத இழிவு வன்முறைப் பேச்சு: பாரதிராஜா மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு பதிவு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

bharathirajaa - 2026

முன்னாள் சினிமா இயக்குனர் பாரதிராஜா மீது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் ஹிந்து மத இழிவு வன்முறைப் பேச்சுக்காக வழக்கு பதியப்பட்டது.

சென்னை வடபழனியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த சினிமா படத்தொடக்க விழாவில் முன்னாள் சினிமா பட இயக்குனர் பாரதிராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘இந்து கடவுளான பிள்ளையாரை இறக்குமதி கடவுள் என்று பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்படுத்துவோரின் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம்’ என்று ஆவேசமாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்.

இது குறித்து ஹிந்து மத அமைப்பைச் சேர்ந்த வி.ஜி.நாராயணன் என்பவர்  வடபழனி போலீசில் புகார் அளித்தார்.  ஆனால் போலீஸார் வழக்கம் போல் நடவடிக்கை  எதுவும் எடுக்காமல் மெத்தனமாகவே இருந்தனர். இதனால் வருத்தமுற்ற வி.ஜி.நாராயணன்,  பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடுமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதை அடுத்து வடபழனி போலீசார் முன்னாள் சினிமா இயக்குனர் பாரதிராஜா மீது நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.