
இனிப்பூட்டும் சர்க்கரை விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால், சர்க்கரை விலை குறையும் என்கிறார்கள் வர்த்தகர்கள்.
வட மாநில சர்க்கரை வரத்து அதிகரித்துள்ளதாலும், நாட்டுச் சர்க்கரை பயன்பாடு கூடியுள்ளதாலும், சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.5 வரை குறைந்துள்ளது.
மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிடட் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது. வாரத்துக்கு 120 லாரிகளில் வந்த சர்க்கரை தற்போது 250 லாரிகள் என அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சர்க்கரை பயன்பாடு அதிகமாக இருந்தது. அண்மைக் காலமாக நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி ஆகியவற்றை பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர். எனவே சர்க்கரை பயன்பாடு குறைந்து வருகிறது. இதனாலும் தேவை கணிசமாகக் குறைந்து சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ. 5 குறைந்துள்ளதாம்.
சர்க்கரை முதல் ரகம் கிலோ ரூ.36க்கு விற்று வந்தது ரூ. 31 ஆகவும், இரண்டாவது ரகம்ரூ.33க்கு விற்றது, ரூ.30 ஆகவும் சரிந்துள்ளது.
முண்டியம்பாக்கம் சர்க்கரை முதல் ரகம் கிலோ ரூ. 36-ல் இருந்து ரூ.34 ஆகவும், இரண்டாம் ரகம் ரூ.34ல் இருந்து ரூ.32 ஆகவும் சரிந்துள்ளது. சர்க்கரை விலை வரவு கூடியிருப்பதால், மேலும் குறையும் என்று கூறுகின்றனர் வர்த்தகர்கள்.



