ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு; அதற்குள் தயார் நிலையில் வையுங்கள்: பள்ளிகளுக்கு உத்தரவு!

கல்வி சற்றுமுன் தமிழகம்

school - 2026

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதற்குள் அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் வெளியிட்ட அறிவிப்பு…

கோடை விடுமுறைக்குப் பிறகு 2018-2019-ஆம் கல்வியாண்டில் ஜூன் 1-ஆம் தேதி அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும். அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது பள்ளி வளாகம் தூய்மையானதாகவும், நேர்த்தியானதாகவும், கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் போன்ற நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று ஜூன் 1-ஆம் தேதியே ஆசிரியர்கள், வகுப்புகளுக்கான கால அட்டவணை வழங்கப்படுதல் வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.