ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்… டிடிவி உற்சாகம்

சற்றுமுன்

ஆளுனரை சந்தித்த பின் அடையாறு வீட்டில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர்…

எடப்பாடி ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். துரோகிகள் வாழ்ந்ததாக சரித்திரம்
இல்லை.

ஒபிஎஸ், ஈபிஎஸ் ஆட்சியை அகற்றாமல் ஒயமாட்டோம்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மை நீருபிக்க கோரும்போது சீலிப்பர் செல்ஸ் தங்கள்
வேலையை தொடருவர்.

இந்த முதல்வர் நீடிக்கக்டாது என்பதில் ஒற்றுமையாக உள்ளோம்.

ஆளுனரிடம் உட்கட்சி பிரச்சினை இல்லை என எடுத்து கூறியுள்ளோம். நடவடிக்கை
எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். தன் கடமையை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

குதிரை பேரம் நடக்க ஆளுனர் இடம் கொடுக்கக்கூடாது.

சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் தலைமை நிலைய செயலர், அவைத் தலைவர் பதவி
கேட்டார். அவர் அணி மாறியது முன்பே தெரியும். அவர்
மிரட்டப்பட்டுள்ளார்.

ஜக்கையன் ரயிலில் வரும் போது அவர் மீது பணம் பாதாளம் வரை சென்றுள்ளது. துரோக
ஆட்சி நீடிக்காது.

9- ம்தேதி நடை பெறும் ஆர்ப்பாட்டத்தில் நானே கலந்து கொள்வேன். .. என்று டிடிவி
செய்தியாளர்களிடம் பேசினார்

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.