பேராசிரியராக மாறும் ரஜினிகாந்த்

சினி நியூஸ் சினிமா

rajinikanth black - 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் வெளிநாடுகளிலும் நாளை முதல் இந்தியாவிலும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு இமயமலை அருகே உள்ள டார்ஜிலிங் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறவுள்ளதாகவும், இந்த படத்தில் ரஜினி பேராசிரியராக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

rajini karthick1 - 2026அதற்காகவே ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக கருப்புமுடி மற்றும் லேசான தாடியுடன் தோற்றமளித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளதாகவும், பாபிசிம்ஹா மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.