சாக்கடை எங்கே ஓடுதுன்னு சந்தேகமா இருக்கே! சூடு சொரணை ஸ்டாலினுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில்!

Published:

pon radhakrishnan - 2026

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவரிடம், கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர், அதிமுக., பாஜக., கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையத் தயாராக உள்ளனர். என்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சேருமா என்று கேட்ட போது, விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று சிரித்துக் கொண்டார் பொன்.ராதாகிருஷ்ணன்.

அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் அநாகரிகமான வார்த்தைகள். சாக்கடை எங்கே ஓடுகிறது என்பது சந்தேகப் படும்படியாக இருக்கும் வார்த்தைகள் என்றார் அவர்.

மேலும், இந்தத் தேர்தலில் மோடியின் சாதனைகளைச் சொல்லி பிரசாரம் செய்வோம். அடித்தட்டு மக்களுக்கு மோடியின் அரசாங்கம் செய்துள்ள நல்ல திட்டங்களையும் செயல்பாடுகளையும் சொல்லி பிரசாரம் செய்வோம் என்றார்.

உலக அளவில் இந்தியாவின் பெருமை உயர்ந்திருப்பதையும், உலக இந்திய மக்களுக்கு மோடி செய்த நல்ல செயல்களையும், அடுத்த ஐந்து ஆண்டுகள் ஒவ்வொரு இந்தியனுக்கும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தலைநிமிர்ந்து நடப்பதற்காக பிரசாரம் செய்வோம். என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img