சௌதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம்- காலா..!

உலகம் சற்றுமுன் சினி நியூஸ் பொது தகவல்கள்

kaala review 1 - 2026

சௌதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை காலா பெற்றுள்ளது. 1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தடையை நீக்குவதாகக் கடந்த வருடம் சவுதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து சமீபத்தில் ரியாத்தில் 35 வருடங்கள் கழித்து ஒரு திரையரங்கம் திறக்கப்பட்டது.

பிளாக் பாந்தர் – ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சவுதி அரேபியாவில் காலா படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை காலா படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.