சவூதி அரேபியா கால்பந்து வீரர்கள் தண்டிக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மையல்ல: கால்பந்து சங்கம் அறிவிப்பு

சற்றுமுன் விளையாட்டு

04 June14 foot ball - 2026
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவுடன் சவூதி அரேபியா அணி மோதியது. இந்த போட்டியில் ரஷ்யா 5-0 கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சரியாக விளையாடாத சவூதி அரேபியா கால்பந்து வீரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியானது. இந்த தகவலை, சவூதி அரேபியா கால்பந்து சங்கம் மறுத்துள்ளது.

இதுகுறித்து சவூதி அரேபியா கால்பந்து சங்க அதிகாரி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சவூதி அரேபியா கால்பந்து வீரர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை. மூன்றாண்டுக்கு அவர்களது செலவுகளை நாங்களே ஏற்றுள்ளோம். வீரர்களின் திறமைகள் என்ன என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.