
வேளாண் சட்டம் தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டுப் பகிருமாறு, பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார்.
டிசம்பர் 17ஆம் தேதி இட்ட கடிதத்தில் மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். விவசாய சகோதர சகோதரிகளுக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் எழுதி இருந்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா இரு மாநில அரசுகளின் உதவியுடன் அம்மாநில விவசாயிகள் தில்லி எல்லையில் கடந்த 24 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இரு மாநில அரசுகளால் மத்திய அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு நடத்தப் படும் போராட்டத்தில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியும் இதுவரை முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 8 பக்க கடிதம் ஒன்றை எழுதி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுதிய அந்தக் கடிதம்…
இந்நிலையில் பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவினை தமிழிலும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், வேளாண் துறை அமைச்சர் தோமர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பிரதமரின் டுவிட்: