
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் ஒருசில வாரங்களில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும், அரசியல் களத்தில் குதிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருப்பதாகவும், அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் திடீரென அரசியல் வேண்டாம் என்று ரஜினி முடிவெடுத்துள்ளாராம். அதிர்ச்சி அடைய வேண்டாம். இந்த முடிவு சினிமாவில் மட்டும்தான். ஆம், இனிமேல் ரஜினி நடிக்கும் சினிமாவில் அரசியல் காட்சிகளோ, வசனங்களோ இருக்காது என்று கூறப்படுகிறது.
காலா படத்தில் இடம்பெற்ற ஒருசில வசனங்கள் அவரை எதிர்ப்பவர்களுக்கு சாதகமாக இருந்ததால் இனிமேல் அரசியல் என்பது அவரது சினிமாவில் இருக்காது என்றே தெரிகிறது. தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் முழுக்க முழுக்க சமூக பிரச்சனை ஒன்றை அலசுவதாக இருந்தாலும் அரசியல் வசனம் அதில் கிடையாது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய பின்னர் ஒட்டுமொத்தமாக மீண்டும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரஜினி பேச உள்ளதாகவும் அதன் பின்னர் தனது முதல் அரசியல் கட்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது



