மாநிலங்களவை துணைத் தலைவராக பாஜக.,வின் ஹரிவன்ஷ் வெற்றி!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்

harivansh - 2026

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் தேஜகூ., வேட்பாளர் ஹரிவன்ஷ் #Harivansh வெற்றி பெற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற்றார். எதிர்க் கட்சி கூட்டணி வேட்பாளர் ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

தேஜகூ., வேட்பாளராகப் போட்டியிட்ட 62 வயதாகும் ஹரிவன்ஷ் நாராயண் சிங், முன்னாள் பத்திரிகையாளர். முதல்முறையாக மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் ஒடிஷா மாநில பொதுச் செயலர் பொறுப்பாளராக இருந்தவர்.முன்னாள் பிரதமர் சந்திரசேகருக்கு ஊடக ஆலோசகராகத் திகழ்ந்தவர்.

தங்களது வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒடிஷா முதல்வர் நவீன் பட் நாயக்கிடம் கேட்டுக் கொண்டார். இதை அடுத்து அவரது கட்சி எம்.பி.க்கள் 9 பேரும் ஹரிவன்ஷுக்கு வாக்களித்தனர். மேலும், அதிமுக.,வின்13 எம்.பி.க்களும் ஹரிவன்ஷுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் 20 வாக்கு வித்யாசத்தில் தே.ஜ.கூ., வேட்பாளர் வெற்றி பெற்றார். அவரை பிரதமர், மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

மாநிலங்களவையின் முன்னாள் துணைத் தலைவர் பிஜே. குரியன் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து தேர்தல் நடைபெற்றது.

NDA’s candidate wins election.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.