நெல்லை மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்- கலெக்டர் அறிவிப்பு

சற்றுமுன் தமிழகம்

05 Aug09 Amma plan - 2026

நெல்லை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களை கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஒரு தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும், உழவர் பாதுகாப்பு அட்டை குறித்தும், நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் மனு கொடுக்கலாம். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில் இன்று  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடக்கிறது. அதன்படி, நெல்லை தாலுகா பழவூர், பாளையங்கோட்டை தாலுகா முத்தூர், சங்கரன்கோவில் தாலுகா வாழவந்தாபுரம், தென்காசி தாலுகா பாட்டாக்குறிச்சி, செங்கோட்டை தாலுகா குன்னக்குடி, சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர், வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல், ஆலங்குளம் தாலுகா கடங்கநேரி, அம்பை தாலுகா ஆலடியூர் பகுதி1, நாங்குநேரி தாலுகா கீழகருவேலங்குளம், ராதாபுரம் தாலுகா ராதாபுரம், கடையநல்லூர் தாலுகா சிந்தாமணி, திருவேங்கடம் தாலுகா சத்திரங்கொண்டான், மானூர் தாலுகா தென்கலம், சேரன்மாதேவி தாலுகா வடக்கு கபாலிபாறை ஆகிய கிராமங்களில் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.