இந்தியா வறுமையின் பிடியில் இருந்து மீட்டுள்ளது: டிரம்ப் பாராட்டு!

உலகம் சற்றுமுன்

modi trumb handshake - 2026

இந்தியா வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளது, கோடிக்கணக்கான மக்களை இந்தியா வறுமையிலிருந்து மீட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவில் 2005  2016க்கு இடையிலான 10 ஆண்டு காலத்தில் 27 கோடியே 10 லட்சம் பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

இதன் மூலம் இந்தியாவில் 55 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக வறுமை சதவீதம் குறைந்துள்ளது என்று பாராட்டினார்.

மேலும், நமது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உலகத்தை விட்டுச் செல்கிறோம், எந்த விதமான தேசத்தை அவர்கள் பெற இருக்கிறார்கள் என்பதே இப்போது நம் முன் கேள்வியாக நிற்கிறது என்றார் டிரம்ப்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.