முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

parithi ilamvazhuthi - 2026

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 58.

திமுகவில் சாதாரண உறுப்பினர் முதல் துணைப் பொதுச்செயலாளர் வரை பதவி வகித்தவர், 6 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1996-2001ல் துணை சபாநாயகராக பதவி வகித்தவர் பரிதி இளம்வழுதி. 2006-2011ல் திமுக ஆட்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர். பின்னாளில் திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இன்று அதிகாலை காலமான பரிதி இளம்வழுதி உடல் பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பரிதி இளம்வழுதி மறைவுக்கு திமுக., தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பரிதி இளம்வழுதியின் மறைவு பெரும் துயரத்தை அளித்துள்ளது; தன்னந்தனியாக சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் வல்லமை படைத்தவர் பரிதி இளம்வழுதி- என்று அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.