தனியார் மருத்துவ கல்லூரியில் நடந்த மருத்துவ கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 143 மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அவர்கள் பட்டங்களை வழங்கினார்.
பெரம்பலூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 143 மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் –
மேலும் மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து டாக்டர் பட்டம் பெறும் நீங்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டும் என கூறினார்.
இந்நிகழ்வில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர் MGR மருத்துவ பல்கலை கழக துணைவேந்தர் கீதாலெட்சுமி, கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால், மாவட்ட ஆட்சியர் சாந்தா மற்றும் கல்லூரி தலைவர் சீனிவாசன், பெற்றோர்கள் , மாணவ – மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



