முதல்வர் பழனிச்சாமியை அடித்துவிடுவேன் என்ற பயத்தால் அவர் ஒதுங்கிப் போகிறார் என்றும், ஐபிஎஸ் அதிகாரி குறித்து அவதூறாகவும், பாமக., ராமதாஸ், ஜான்பாண்டியன் என பலரையும் இழுத்து சாதி மோதலைத் தூண்டி விட்டதாகவும், தன் சமுதாய இளைஞர்களை வெட்டு குத்து என வன்முறைக்குச் செல்ல தவறான வழிகாட்டியதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார் ஜெயலலிதா போட்ட பிச்சையில் எம்.எல்.ஏ., ஆகியுள்ள கருணாஸ். இதை அடுத்து அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரம்…
கருணாஸ் மீது கொலைமுயற்சி (307), கொலை மிரட்டல் (506(2)), வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது (153), இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது (153(A)(1)(a)) பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தூண்டும் வகையில் பேசுவது (504), தனது கருத்தின் மூலம் பொது மக்களுக்குத் தீங்கு ஏற்படும் வகையில் நடப்பது 505(i) பொதுமக்களுக்கு எதிராகவோ மக்களுக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்துவது (b) உள் நோக்கத்துடன் மாற்று சமூகத்திற்கு அச்சத்தை உருவாக்கும் வகையில் எதிராகப் பேசுவது(c) தூண்டுவது, உருவாக்குவது (ii), கொலை முயற்சி 307, கொலைமிரட்டல் 506(i) சென்னை மாநகர போலீஸ் சட்டம் அனுமதியை மீறி கட்டுப்பாடுகளை மீறிப் பேசுவது (41(6)(a)(b)(c) MCP Act 1888) குற்றச்சதி (r/w 120(B))IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தவிர கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கும் தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போராட்டத்தில் இரண்டு சம்பவங்களின் போது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கீழ்கண்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 : சட்டவிரோதமாக கலகம் விளைவிக்கும் நோக்கத்துடன் கூடுவது(146) உயிரைப் பறிக்கும் ஆயுதங்களுடன் கூடுவது(148), ரசிகர்களைச் சட்டவிரோதமாக தடுத்தல் (341), அதிகாரிகளின் உத்தரவை மீறிச் செயல்படுவது (188) மற்றும் தடை செய்யப்பட்ட இடத்தில் கூடுவது 41(6) mcp actவழக்கு 2: சட்டவிரோதமாக ஒன்றுகூடி செயல்படுவது (147), 148, ரசிகர்களை சட்டவிரோதமாகத் தடுத்தல் (341), ஆபாசமாகப் பேசுதல் 294(b), காயம் ஏற்படுத்துவது (323), ஆயுதத்தை வைத்து காயம் ஏற்படுத்துவது (324), கொலை முயற்சி (307), ஆயுதங்களை வைத்து கொலை மிரட்டல் 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில் இவர் 9-வது குற்றவாளியாகச் சேர்க்கப் பட்டுள்ளார்.




