தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பால் ஏகத்துக்கும் குஷி!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

தீபாவளிக்கு முந்தைய நாளான நவ.5 அன்றும் அரசு விடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வரும் நவ.6 அன்று கொண்டாடப்படுகிறது. நவ.6 செவ்வாய்க் கிழமை வருகிறது. இடையில் திங்கட் கிழமை அரசு பணி நாளாக இருப்பதால் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்து ஊருக்குச் செல்பவர்கள் தீபாவளிக்கு இடையில் உள்ள திங்கட் கிழமை அன்று விடுப்பு எடுத்தால் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையும் விடுப்பில் கழிக்கப்படும். தொடர்ந்து 3 நாட்கள் விடுப்பாகிவிடும் என்பதால், பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பள்ளி கல்லூரிகளில் பயில்பவர்களுக்கும் இந்த ஒருநால் வேலை தினம் இடையூறாக இருந்தது. இதை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான வரும் நவ.5 அன்று அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:

பல தரப்பிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் நவ. 6 அன்று தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏதுவாக நவ.5 அன்று தமிழகம் முழுதும் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பல்வேறு தரப்புகளிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை அரசு பரிசீலித்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாவட்டத்திலுள்ள அரசு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.”

இந்த அறிவிப்பைக் கேட்டதும் பலரும் இப்போதே தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.