இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; கையெழுத்திட்டார் சிறீசேன

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

sirisena - 2026

கொழும்பு : இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஏஜென்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்தா ராஜபட்ச பிரதமராக பதவி ஏற்றார். இவர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கூறப்பட்டது.

அவ்வாறே செய்திகளும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் திடீரென இன்று இரவு 8.30 மணிக்கு அதிபர் மைத்ரீபால சிறீசேன, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் கெசட் பத்திரத்தில் கையெழுத்திட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பிரதமரை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று கூறப்பட்ட நிலையில், அங்கே சட்டச் சிக்கல்கள் எழுந்தன. இந்நிலையில் இத்தகைய முடிவை அதிபர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.