தமிழகத்தில் இன்று… மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
beela rajesh 1 - 2026

தமிழகத்தில் இன்று மேலும் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்தது.

தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று கூறியபோது…

தமிழகத்தில் இன்று மேலும் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்தது. அதே நேரம், தமிழகத்தில் மேலும் 6 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சோதனைக்கான தனியார் ஆய்வகங்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று கூறினார்.

தமிழகத்தில் இன்று ஒரு பெண் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.

districtwise breakup - 2026

முன்னதாக, சுகாதாரத் துறையினர், தில்லி சென்று திரும்பிய அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நிறைவடைந்தாகவும், தனிமைப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் கூறினர்.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த தம்பதியரில் 45 வயதான மனைவி உயிரிழந்ததாக இன்று காலை சுகாதாரத்துறையினர் உறுதிப்படுத்தினர். இதையடுத்து தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.