கம்யூனிஸ்ட்கள் இந்திய அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள்: ஹெச்.ராஜா காட்டம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்

hraja interview - 2026

பெரம்பலூர் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் இன்று நடைபெற்ற மகா தீபம் ஏற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் H.ராஜா செய்தியாளர்கள் சந்தித்தார்…

அப்போது அவர் பேசியதாவது :குன்று தோறும் முருகன் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள், பெரம்பலூரில் உள்ள இந்த பிரம்மரிஷி மலையை சட்ட விரோதமாக குவாரியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

கஜா புயல் குறித்த மத்திய ஆய்வு குழு 4 நாட்கள் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்கள். மிகப் பெரிய சேதம் ஏற்பட்டு பலருடைய வாழ்க்கை 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது.

சேத மதிப்பு முழுமையாக மதிப்பிடப்படவில்லை. மின் வாரியத்துறையினர் போர்க்கால அடிப்படையில் செய்து வருவது பாராட்ட தக்கது. மத்திய அரசு அதிக பட்ச நிதியை ஒதுக்கும் என்று நம்புகிறேன்.

சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை அவமதித்த காவல் கண்காணிப்பாளரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது இந்து விரோத கேரள அரசின் நாட்கள் எண்ணப் படுகிறது என்றார்.

சரண கோஷம் போட்டதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் மோசமான செயல். அந்த கட்சியில் உள்ள இந்துக்கள், ஐயப்ப பக்தர்கள் அதனை விட்டு வெளியே வர வேண்டும்.

இந்து விரோதம் என்பது தேச விரோதம் ஆகும். இந்துக்களுக்கு எதிராக செயல்படும் கேரள அரசாங்கத்தை அரபிக்கடலில் கரைக்காமல் விட மாட்டோம்.

திருச்சி ஜோசப் கல்லூரியில் இந்து கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் மற்றும் இதிகாசங்களுக்கு எதிராக நடக்கவுள்ள பன்னாட்டு கருத்தரங்கை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்

அதன் காணொளிக் காட்சி… 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.