பிரபல குணசித்ர நடிகர் காலமானார்! திரை உலகினர் அஞ்சலி!

சினி நியூஸ் சினிமா தமிழகம் பொது தகவல்கள்
ragavendra 2 - 2026

மூத்த நடிகரும் பாடகருமான டி.எஸ். ராகவேந்தர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்துப் புகழ் பெற்றார் டி.எஸ். ராகவேந்தர். உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகவேந்தர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

ragavendra 1 - 2026

வைதேகி காத்திருந்தாள் படத்துக்குப் பிறகு சிந்து பைரவி, சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அவருடைய மகள் கல்பனா ராகவேந்தர், பின்னணிப் பாடகியாக உள்ளார்.

kalpana - 2026

இன்று மதியம் சென்னை கேகே நகரில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.