திண்ணையில் உறங்கிய 70 வயது மூதாட்டி! இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
old-woman
old-woman

70 வயது மூதாட்டியை இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

70 வயது மூதாட்டி ஒருவர், உத்தரபிரதேச மாநிலம் கண்ணாஜ் என்ற பகுதியில் தனது உறவினர்கள் உடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மூதாட்டியின் உறவினர்கள் அனைவரும் வீட்டினுள் இருந்த பொழுது பாட்டி மட்டும் வெளியே தூங்கிக் கொண்டிருந்துள்ளர். அப்பொழுது அந்த வழியாக சென்ற இளைஞர்கள் சிலர் 70 வயது மூதாட்டி என்று தெரிந்தும் அவரை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால் மூதாட்டிக்கு மூக்கு மற்றும் தாடை வாய் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், குடும்பத்தினர் யாரும் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கவில்லை.

ஆனால் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசாந்த் வர்மா கூறுகையில், குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்காத நிலையில், மூதாட்டியின் பேரன் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அக்கம்பக்கத்தினர் மூலம் தகவல் அறிந்த போலீசார் தாமாகவே முன்வந்து எப்ஐஆர் பதிவு செய்தோம் என கூறியுள்ளார்.

வீட்டின் உள்ளே மருமகள், பேரன் ஆகியோர் இருந்தபோதிலும் வெளியே தூங்கி கொண்டிருந்த பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, பாலியல் பலாத்காரம் செய்த ஆண்களை அடையாளம் காட்டுவதாக அந்த மூதாட்டி கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.