கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளித்த லெஜண்ட் சரவணன்
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் புயல் நிவாரண நிதியாக அளித்தது ரூ.1 கோடி! சென்னை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் அந்நிறுவன உரிமையாளர் சரவணன், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 1 கோடியை முதல்வரிடம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன், கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் புயல் நிவாரண நிதியாக அளித்தது ரூ.1 கோடி!
சென்னை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் அந்நிறுவன உரிமையாளர் சரவணன், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 1 கோடியை முதல்வரிடம் அளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன், கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் எக்காரணம் கொண்டும் தவறான முடிவுக்கு செல்ல வேண்டாம், கஷ்டமும் நஷ்டமும் எவருக்கும் வரும். நம்பிக்கையோடு எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
Leave a Reply