மகளுடன் தமிழில் பேசி விளையாடும் தோனி… வைரலாகும் வீடியோ!

லைஃப் ஸ்டைல் விளையாட்டு

dhony with ziva - 2026

சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தோனி தன் மகள் ஸீவாவுடன் கொஞ்சிப் பேசி விளையாடும் சிறிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

படுக்கையில் படுத்துக் கொண்டே தன் மகள் ஸீவாவுடன் பேசி விளையாடிக் கொண்டிருக்கும் தோனியிடம் மகள் நலம் விசாரிக்க.. அதற்கு பதில் சொல்கிறார் தோனி.

ஒரு கட்டத்தில் தமிழில் எப்டி இருக்கீங்க என்று குழந்தை ஸீவா கேட்க… அதற்கு நல்லா இருக்கேன் என்று பதில் சொல்கிறார் தோனி. இதனை தனது இன்ஸ்டாக்ராமில் பகிர்ந்திருந்தார் தோனி. இது அரை மணி நேரத்தில் 6 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டி ரசிக்கப் பட்டது.

 

View this post on Instagram

 

Greetings in two language

A post shared by M S Dhoni (@mahi7781) on

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதோடு, சென்னை சூப்பர் கிங்க்ஸின் டிவிட்டர் பக்கத்திலும் இது பாப்புலர் ஆனது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.