திருப்பதி லட்டு… இனி ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
tirupathi laddu

திருமலை பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் ஆன்லைனில் கூட ஸ்ரீவாரி லட்டுகளை பெற முடியும்.

லாக்டௌன் காரணமாக திருமலை வெங்கடேசப் பெருமாளின் தரிசனத்திற்கு தூரமாகி உள்ள பக்தர்களுக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஶ்ரீவாரி ஆசிகளை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற உத்தேசத்தோடு லட்டு பிரசாதம் விற்று வரும் விஷயம் தெரிந்ததே.

ரூபாய் 25 க்கே தள்ளுபடி விலையில் லட்டுகளை அனைத்துத் திதிதே செய்தி நிலையங்களிலும், திதிதே கல்யாண மண்டபங்களிலும் விற்றுவருகிறது.

பிரத்தியேக ஆர்டர் மூலம் சுவாமி வாரி லட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்புவோம் என்று டிடிடி தகவல் வெளியிட்டுள்ள விஷயமும் தெரிந்ததே.

இதற்கு பக்தர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்ததால் இனிமேல் லட்டுகளை ஆன்லைன் மூலமும் விற்பதற்கு தீர்மானித்துள்ளது.

ஆன்லைனில் லட்டுகளை ஆர்டர் செய்பவர்கள் அவற்றை தமக்கு அருகிலுள்ள டிடிடி செய்தி நிலையங்கள், டிடிடி கல்யாண மண்டபங்களில் இருந்து சேகரிக்கும் ஏற்பாடும் செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.