ஜீ5 டிவி,.க்கான ஆன்லைன் படத்தில் இந்து மதத்தைக் கொச்சைப் படுத்தும் வகையிலும், ஹிந்து மத சிறுபான்மை வகுப்பினரான பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையிலும் இருப்பதாகக் கூறி, காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக., சட்டப் பிரிவு மாநிலச் செயலாளர் அ.அஸ்வத்தாமன் அளித்துள்ள புகார் மனுவில்…
பெறுதல்: உயர்திரு. காவல்துறை ஆணையர், சென்னை.
பொருள்: மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டுதல் , ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டி , மத அமைதியை குலைத்தல், கொச்சையான வார்த்தைகளை வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் வெளியிடுதல், வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் பேசி குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைக்க முயற்சித்தல், உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்தல், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது அவதூறு பரப்புதல் ,அவதூறாக கொச்சையாக சமூக வலைதளங்களில் பதிவிடுதல் ஆகிய குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க கோருதல்- சார்பு
Godman என்கிற online திரைப்படம் ஒன்றின் trailer சமீபத்தில் ZEE 5 என்கிற online channel ல் வெளியாகி உள்ளது.
அந்த trailer ல் பிராமணர்களைப் பற்றியும் , இந்து மதத்தைப்பற்றியும், அவதூறான கருத்துக்களும் ,கொச்சையான காட்சிப் படுத்துதல்களும், வசனங்களும் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.
மேற்கண்ட trailer, வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் ,அதன் மூலம் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவ்வாறு புண்படுத்தி அதன்மூலம் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், இந்து வழிபாடுகளை கொச்சைப்படுத்தி அதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தும் நோக்கத்திலும், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டும் நோக்கத்திலும் , மத அமைதியை குலைக்கும் வகையிலும், கொச்சையான காட்சிப்படுத்தல் மூலம் வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் வெளியிடும் வகையிலும், வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் வசனங்களை காட்சிப்படுத்தி குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
எனவே மேற்குறிப்பிட்ட அந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள், ZEE 5 நிர்வாக இயக்குனர் மற்றும் உரிமையாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 295 , 295(A), 296 ,298 ,499, 504, 505,188 மற்றும் 67 IT ACT உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்…. என்று குறிப்பிட்டுள்ளார்.
இது போல், இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திரைத் துறையில் தொடர்ந்து இந்துமத சாமியார்களை இழிவுபடுத்துகிறார்கள். சாதி சிறுபான்மை பிராமணர்களை குறிவைத்து தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். தற்போது, “GodMen” என்கின்ற பெயரில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளங்கோ தயாரிப்பில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் zee5 என்பதில் வெளியாக இருக்கிறது இந்த சீரிஸ்.
பிராமணன் மட்டும்தான் வேதம் படிக்க வேண்டுமென்று எந்த சாஸ்திரத்தில் சொல்லி இருக்கிறது. சுற்றி இருக்கக் கூடிய எல்லா பிராமணர்களும் அயோக்கியர்களாக இருக்கிறார்கள். இந்த உலகத்துக்கு பிராமணன் எப்படி இருக்கணும்னு காட்டப் போறேன். அதனால நீ பிராமணன் ஆக வேண்டும் அய்யனாரே! நான் எந்தக் கடவுள் பேரைச் சொல்லி ஏமாத்தல!
ஏன்னா நான் தான் கடவுள்!! என்று வசனங்களைச் சொல்லி வேண்டுமென்றே கொச்சைப் படுத்துகிறார்கள்.
வேதம் வகுத்துக் கொடுத்த வியாசன் ஒரு மீனவன் என்பதை மறைத்து விட வேண்டாம்; வேதம் அனைவரும் படிக்கலாம் விரும்பியவர்கள் படிக்கலாம் அதற்கு எந்தத் தடையும் இல்லை! இந்து சாமியார் கைது செய்யப்பட்டு செல்வது போலவும், மிகுந்த ஆபாச காட்சிகள் நிறைந்த படக் காட்சிகளையும் அமைந்திருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை, சாதி சிறுபான்மை பிராமண சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் படியாக காட்சி அமைத்ததை இந்து தமிழர் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல கருத்து சுதந்திரம் என்கின்ற பெயரில், பிற சாதியினரின் பெயர்களை குறிப்பிட்டோ, அல்லது பிற மதத்தவர்களின் சட்டவிரோத செயல்களை கண்டிக்க; காட்சி அமைக்க துணிச்சல் இல்லாத திரைத்துறையில் இருக்கக் கூடிய மேலே குறிப்பிட்ட நபர்கள் போன்ற பலரால் தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகள் கொச்சைப் படுத்தப்பட்டு வருகிறது. இந்துக்கள் என்றுமே ஜனநாயகத்தை நம்புபவர்கள். திரைத்துறையில் தொடர்ந்து எந்த சமுதாயத்தையும் விமர்சிக்காமல் இருக்க வேண்டும் என்கின்ற போக்கில் இருக்கிறோம்.
அதே நேரத்தில் தொடர்ந்து இதுபோன்று திரைத்துறை காட்சிகளோ அல்லது சின்னத்திரை காட்சிகளோ அமைவதை தமிழக அரசும் சைபர் கிரைம் காவல் துறையும் தொலைக்காட்சி ஊடகங்களில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் “டிராய்” அமைப்புகள் இந்த படம் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் படத்தை வெளியிடக் கூடிய தொலைக்காட்சி ஊடகம் போன்றவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் தமிழக அரசை காவல்துறையை கேட்டுக்கொள்கிறோம்.
இந்து உணர்வாளர்கள் இந்த படக் குழுவினர், ஜீ தமிழ் Zee5 மீது சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டுகிறேன். “எரிமலை பூமிக்குள் எரிந்து கொண்டுதான் இருக்கும் அது என்றாவது ஒரு நாள் வெடித்துக் கிளம்பும்! அதற்காக எரிமலை இல்லை என்று மட்டும் நினைக்க வேண்டாம்” திரைத் துறையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை அமைத்து தங்களை விளம்பரப் பிரியர்களாக காட்டிக் கொள்ள நினைக்கும் கருத்து கயவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்… என்று தெரிவித்துள்ளார்.
“GodMen” படத் தயாரிப்பாளருக்கு தொலைபேசியில் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில், எச்சரிக்கை விடுத்ததுடன், கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. மேற்படி காட்சிகளை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும், தொலைகாட்சி சேனலின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்றும் அதன் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன் தயாரிப்பாளரை தொடர்புகொண்ட அந்தணர் முன்னேற்ற கழக தலைவர் வழக்கறிஞர் ராஜாளி சீ.ஜெயபிரகாஷ், பிராமண சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் படியான காட்சிகளை நீக்காவிட்டால் அந்தணர் முன்னேற்றக் கழகம் சார்பில் தொலைகாட்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தயாரிப்பாளரை எச்சரித்துள்ளார்.
ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்கத்தின் சார்பில், பிராமண சங்க அகில இந்திய தலைவர் ராமநாதன், சம்பந்தப் பட்ட இயக்குநருக்கு தொலைபேசியில் தனது கண்டனத்தைப் பதிவு செய்து, இத்தகைய அவதூறான காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
அவர் நடத்திய தொலைபேசி உரையாடல்…