
தமிழகத்தில் இன்று 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 18,545 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 133 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்… தமிழகத்தில் இன்று மேலும் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 678 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 138 பேருக்கும், கேரளாவில் இருந்தும் வந்த ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று பாதிப்பு 817 ஆக உள்ளது.
இதை அடுத்து தமிழகத்தில் ஒட்டு மொத்த பாதிப்பு 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 4 பேரும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா ஒருவரும் என 6 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 133 ஆக உள்ளது.
இதனிடையே, 567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9,909 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8,500 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் 11,231 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் கிடைத்த முடிவுகளில், 817 பேரில், ஆண்கள் 508 பேர், பெண்கள் 309 பேர்…என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது.

