பெண்ணின் அனுமதியின்றி ஆபாச வாட்ஸ்அப் குழுவில் இணைத்த அட்மின் இளைஞர் கைது!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

whatsapp block - 2026

மும்பையில் whatsapp குழுவைச் சேர்ந்த அட்மின் ஒருவர் மும்பை போலீசாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முன்பின் தெரியாத பெண் ஒருவரின் செல்போன் எண்ணை தனது ஆபாச whatsapp குழுவில் இணைத்து தான் அதற்கு காரணம்.

24 வயதான முஷ்டாக் அலி ஷேக் என்ற இளைஞர் இந்த புகாருக்கு உள்ளானவர். இவர் ட்ரிபிள் எக்ஸ் என்ற ஆபாச whatsapp குழுவை நிர்வகித்து வருகிறார், அதில் ஆபாச படங்கள் வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் மும்பையைச் சேர்ந்த குடும்பத் தலைவி ஒருவரின் செல் எண்ணையும் இணைத்ததால் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பெண்மணி கடந்த செப்டம்பரில் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். துவக்கத்தில் அது தனது நண்பர்கள் எவரோதான் இவ்வாறு ஒரு குழுவில் தன்னை இணைத்திருக்கிறார்கள் என்று சாதாரணமாக விட்டுவிட்டார். ஆனால் நாளாக நாளாக அதில் அதிக அளவில் ஆபாச படங்களும் வீடியோக்களும் பகிரப்பட்டுள்ளன.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த குழுவின் admin யாரென்று தேடியுள்ளார் அதிலுள்ள 12 உறுப்பினர்களும் தனக்கு முன் பின் தெரியாத நபர்கள் ஆக இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்தக் குழுவில் எப்படி தனது என் சேர்க்கப் பட்டிருக்கும் என்று அவர் அதிர்ந்துள்ளார்

இதையடுத்து மும்பை போலீசில் அவர் இந்த குழு குறித்து புகார் அளித்துள்ளார். அதில் தனது அனுமதி இன்றி தன்னுடைய எண் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளது, தனக்கு மன உளைச்சலை தந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் விசாரணை நடத்திய போலீசார் ஷேக் என்பவரை கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை சீயோன் தாராவி பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது இந்த எண்ணை தான் தனது உறவினர் ஒருவரின் எண் என்று நினைத்து அதைச் சேர்த்ததாகவும், இந்த எண் தனக்கு எப்படி கிடைத்தது என்று தனக்கு தெரியாது என்றும் அவர் போலீசில் கூறியுள்ளார்

ஆனால் மும்பை போலீசார் அவரை தகவல் தொழில்நுட்ப விதியின் கீழ் புகார் பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து அவரது செல்போன் தடயவியல் நிபுணர்களின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. செல்போனில் இருக்கும் டேட்டாக்களை ஆய்வு செய்து இது குறித்து அவர்கள் அறிக்கை அளிக்க வேண்டும். அதன் பின்னரே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் கூறுகின்றனர்.

இந்தக் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களும் ஷேக் குறித்து தகவல் கொடுத்தால் இந்த நபர் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவின் (2000) கீழ் 5 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க கூடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.