அஜித்தின் 30 வயது வருடம்: நேசிப்போருக்கும், வெறுப்போருக்கும் அஜித் அறிக்கை!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
ajith 1
ajith 1

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். அவர், திரையுலகில் நுழைந்து 30 ஆண்டுகள் ஆகின்றன.

அஜித்குமார், சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆனதை அவருடைய ரசிகர்கள் 30years of ajithkumar என்ற ஹேஷ்டேக்கின் கீழ் அவர் நடித்த படங்களைப் பகிர்ந்து மகிழ்ந்தனர். விஜய், அஜித்தை அவர்களுடைய ரசிகர்கள் எந்த அளவுக்கு புகழ்கின்றனரோ, அதே அளவுக்கு விஜய் ரசிகர்கள் அஜித்தையும், அஜித் ரசிகர்கள் விஜயையும் இகழ்வது வழக்கமான ஒன்றாக இருந்துவருகிறது.

அதுவும் சமூக ஊடகங்கள் வரவுக்குப் பிறகு அது எல்லை மீறி சென்றுள்ளது. இந்தநிலையில், அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

சமூக ஊடகங்கள், பொதுஊடகங்களிலிருந்து விலகியே இருக்கும் அஜித், எப்போதாவதுதான் அறிக்கை மூலம் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குவார்.

இந்தநிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அவருடைய 30 ஆண்டுகால திரை வாழ்க்கை குறித்து அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ரசிகர்கள், நடுநிலையாளர்கள், வெறுப்பாளர்கள் மூவரும் ஒரு நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களிடமிருந்து வரும் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வரும் வெறுப்பையும், நடுநிலையாளர்களிடமிருந்து வரும் நடுநிலையான விமர்சனத்தையும் நான் மனமுவந்து ஏற்கிறேன். வாழு… வாழவிடு… எப்போதும் நிபந்தனையற்ற அன்புடன்..’ என்று என்று அஜித் குமார் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.