கடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை
03 June25 Minister Jayakumar - 2026

சென்னை : திமுக.,வில் செந்தில் பாலாஜி இணைவது கடலில் கரைத்த பெருங்காயம் போல! பழைய பாசத்தின் அடிப்படையிலேயே அவர் திமுக.,வில் இணைகிறார். பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் எதிர்காலம் இருக்கும். தினகரன் கட்சியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிமுக.,வில் இணைந்துள்ளனர். மின் அழுத்த மின்சாரம் என தன்னை கூறிக் கொண்டதில் இருந்து தான் ஆபத்தான மனிதர் என தினகரன் ஒப்புக் கொண்டுள்ளார். பலம் இல்லாதவர்கள் தான் மற்றவர்களை தங்கள் பக்கம் இழுப்பார்கள் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

முன்னதாக தினகரன் கட்சியில் அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுக.,வில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக.,வில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி, தினகரனுடன் சென்றார். பின்னர் தினகரனுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது ஆதரவாளர்களுடன் திமுக.,வில் இணைந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.