மயிலை ஆலய மயில் மடைமாற்றிய வழக்கு! தலைமறைவாக இருந்த கூடுதல் ஆணையர் திருமகள் கைது!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
mylapore temple - 2026

அறநிலைய துறை கூடுதல் ஆணையர் திருமகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. குமார் சென்னையில் கைது செய்தார்.  மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் மயில் காணாமல் போன வழக்கில் திருமகள் போலீஸாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்தார்.

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னை வனநாதர் சந்நிதியில் மிகப் பழைமையான மயில் சிலை இருந்தது. நாகத்தைத் தன் வாயில் கவ்விக் கொண்டிருக்கும் நிலையில் இருந்த இந்த மயில் சிலை திடீரென காணாமல் போய், அதற்கு பதிலாக இரவோடு இரவாக பூச்செண்டை வாயிற் கவ்விய அதே அளவிலான மயில் சிலை வைக்கப் பட்டது.

இது தொடர்பாக, ஆலயத்துக்கு எப்போதும் வரும் பக்தர் ஒருவர் முறையிட ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வழக்குப் பதிவு செய்தனர்.

thirumagal hrnce addl commissioner - 2026
அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள்

இதை அடுத்து அப்போது கோயில் பொறுப்பில் இருந்த அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து மயில் சிலை மாற்றப் பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டுக்கு உள்ளான திருமகளிடம் விசாரணை நடத்த வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சென்ற போது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்நிலையில் திருமகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி குமார் சென்னையில் கைது செய்தார். விசாரணைக்கு பின்னர் அவர் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

1 thought on “மயிலை ஆலய மயில் மடைமாற்றிய வழக்கு! தலைமறைவாக இருந்த கூடுதல் ஆணையர் திருமகள் கைது!”

  1. அவாளேட பொருள அப்படி கிழித்து விடனும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.