ஹைதராபாத்: அடுத்து வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலுடன் தெலங்கானா சட்டசபைக்கும் தேர்தல் நடக்க உள்ளது.
புதிய கூட்டணிகளை தடுக்கவும், எதிர்க்கட்சிகள் விழித்துக் கொண்டு கூட்டு சேர்வதற்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக மாநில சட்டசபையை முன்கூட்டியே கலைக்க முடிவு செய்துள்ளார். இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு பின் சட்டசபை கலைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.




