சென்னை: உடல் நலம் குன்றி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த தேமுதிக., தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
தேமுதிக., தலைவர் விஜயகாந்துக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து இரு தினங்களுக்கு முன்னர், சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அவருக்கு டயலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. இந்நிலையில் இன்று சிகிச்சை முடிந்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.
முன்னதாக, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் முழு உடல்நலம் பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். விரைவில் உடல்நலம் பெற்று பொதுவாழ்வு பணிகளை முன்னெப்போதும் போல் தொடர வேண்டும் என மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.




