அழகான பெண்கள் இருக்குமிடத்தில் பாலியல் அத்துமீறல் இருக்கத்தான் செய்யும்!

Published:

rodrigo duterte phillipines president e1535882306782 - 2026

அழகான பெண்கள் இருக்கும் இடத்தில் பாலியல் அத்துமீறல் இருக்கத்தான் செய்யும் என்று பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் டுடெர்டேவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவுக்கு நாக்கில் அப்படி என்ன இம்சையோ தெரியவில்லை, ஏதாவது உளறி மாட்டிக்கொண்டு விளக்கநிலை அறிக்கை கொடுக்கும் அளவுக்கு அவரது அதிகாரிகளுக்கு வேலையை வைத்து விடுகிறார்.

டுடெர்டே ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, “அழகான பெண்கள் இருக்கிற இடங்களில் பாலியல் வன்கொடுமைகளும் இருக்கத்தான் செய்யும்” எனக் கூறினார். அவரது பேச்சு இப்போது உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பேச்சுக்கு சர்வதேச பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்க நடடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நாட்டின் அதிபரே இவ்வாறு சொல்வது கண்டனத்துக்குரியது என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால், அதிபர் ஒரு நகைச்சுவைக்காகத்தான் அவ்வாறு கூறியதாக அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

Related articles

Recent articles

spot_img