
சோழவந்தான் தென்கரை வைகை ஆற்றில் ஸ்ரீ ஐயப்பனுக்கு ஆராட்டு விழா கோலாகலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை சபரி ஸ்ரீ ஐயப்பன் கோவில் மார்கழி மாதம் உற்சவம் நடைபெற்றது. இங்கு சிவாச்சாரியார் கண்ணன் குழுவினரால் யாக பூஜை ஹோமங்கள் பல்வேறு பாராயணங்கள் வேதங்கள் ஓதி பூஜை நடைபெற்றது.
பின்னர் ஐயப்பன் அலங்கார பூஜையில் அனைவருக்கும் அருள்பலித்தார் பிறகு ஐயப்பன் ஆராட்டு விழாவை முன்னிட்டு சுவாமி புஷ்ப அலங்காரத்தில் கேரளா செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக தென்கரையில் இருந்து புறப்பட்டு சோழவந்தான் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
அங்கு ஏராளமான பக்தர்கள் புடைசூழ சுவாமி வைகை ஆற்றில் இறங்கினார் பக்தர்கள் சரண கோஷம் முழங்க ஐயப்பனை பக்தி பரவசத்துடன் வணங்கினார்கள். பின்னர் சிவாச்சாரியார் கண்ணன் குழுவினர் ஐயப்பன் சுவாமிக்கு பால் தயிர் நெய் மஞ்சள் குங்குமம் உட்பட 18 வகை வாசனை திரவியங்களால் வேதங்கள் முழங்க வைகை ஆற்றில் ஆராட்டு விழா கோலாகலமாக நடந்தது.
அப்போது வானில் கருடன் வட்டமிட பக்தர்கள் சரண கோஷம் முழங்க சுவாமிக்கு பல்வேறு நைவேத்தியங்கள் நடைபெற்றது. பின்னர் சுவாமி யானையில் அமர்ந்து நான்கு ரத வீதிகளில் எழுந்தருளி கோவில் வந்தடைந்தார்.
பக்தர்கள் அனைவருக்கும் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள்சிறப்பு பூஜைகள் செய்து அருள் பெற்றனர், ஏற்பாடுகளை தென்கரை அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் செய்து இருந்தனர்.