
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது, அதற்கான ஆவணங்களை யார் வேண்டுமானாலும் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என்று மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்த நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை கையகப் படுத்துவதில் சிக்கல் உள்ளதாக தமிழக அரசு இன்று நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை நிலம் கையப் படுத்தல் தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்று தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லையா? என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான 2 நோட்டீஸ்களுக்கு தமிழக அரசு தற்போது வரை பதில் அளிக்கவில்லை என்று குறிப்பிட்ட, உயர் நீதிமன்ற மதுரை கிளை, சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் எய்மஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
ALSO READ: எய்ம்ஸ்-க்கான இடம் ஒப்படைக்கப் பட்டது; ஆவணங்களை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்!
இந்நிலையில், நிலத்தை கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தகவல் அளிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தற்போது வரை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.
ALSO READ: எய்ம்ஸ் அமையாது என்று சொல்பவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும்!
முன்னதாக, எய்ம்ஸ் மருத்துவமனை தயாராகிவிடும், எதிர்க்கட்சியினர் இலவசமாக அதில் உலகத் தர சிகிச்சை எடுக்கலாம் என்று தமிழக அமைச்சர்கள் செய்தியாளர்களுடனான பேட்டிகளின் போது கூறி வந்தனர்.
இந்நிலையில் மத்திய அரசுத் தரப்பில் அளித்த பதிலில், இன்னமும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தைக் கையகப் படுத்தித் தரவில்லை என்று கூறப்பட்டது.