
பாளை.,யில் நடைபெறுவதாக உள்ள நக்ஸலைட்டுகள் மாநாட்டைத் தடை செய்யக் கோரி தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கம் மனு அளித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் குறிப்பிட்ட போது…
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் டிச.27 ஆம் தேதி பெரியார் சமூக நீதி நூற்றாண்டு மாநாடு என்ற பெயரில் நக்ஸலைட்டுகள், தேச விரோதிகள் கூட்டம் நடத்தவுள்ளனர். இந்த விழா ஒருங்கிணைப்பாளரான தே.ஜோதி என்ற பெண், அண்மையில் கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட் வேல்முருகன் இறுதிச் சடங்கில் பங்கேற்று அவரது குடும்பத்தினரை சந்தித்து உதவி செய்து வரும் நக்ஸல்! இவரது பேஸ்புக் பதிவுகள் எல்லாம் துப்பாக்கிக் கலாசாரத்தை ஆதரித்தும் தேசத்திற்கு எதிரான வகையிலும் உள்ளது.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர் திமுக உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில், காணொளி வாயிலாக மாநாடு நிறைவுரை மு.க.ஸ்டாலின் நிகழ்த்துகிறார்.
எஸ்டிபிஐ என்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியின் முபாரக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷா நவாஸ், முசுலீம் லீக் நவாஸ்கனி , வேல்முருகன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்பதாக வுள்ளனர்.
நக்சலைட்டுகள் ஒருங்கிணைக்கும் இந்தக் கூட்டம் நடைபெறும் இடம் சி.எஸ்.ஐ டயோசிசன் கிறிஸ்தவ நூற்றாண்டு மண்டபம் என்பது குறிப்பிடத் தக்கது.
இப்படி நக்சல்கள் பயங்கரவாதிகளுடன் திமுக கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் இணைந்து நடத்தும் நிகழ்ச்சியை, தேச விரோத நக்சலைட்டுகள் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி இந்தப் புகார் மனுவை, நெல்லை காவல் ஆணையரிடம் அளித்துள்ளோம்… என்று குறிப்பிட்டார் தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த முத்துராஜ்.
இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன், தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகி முருகன் மற்றும் விசுவ இந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் ஆறுமுகக்கனி ஆகியோர் உடன் இருந்தனர்!