சேலம் கோட்டை மைதானத்தில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாடு இன்று நடைபெற உள்ளது.
கோட்டை மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
பாலியல் வன்முறைக்கு முடிவு கட்டும் வகையில் சூசனம்மாள் ஹாலில் இரண்டு நாள்விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி ஜூலை 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான கொடுமைக்கு முடிவு கட்ட, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இக்கண்காட்சி நடைபெறுகிறது.



