அதிர்ச்சி! தாய் முன்னே மகளை வன்கொடுமை செய்த சம்பவம்!

Published:

k r laedy - 2026

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீட்டில் இருந்த பதின் வயது சிறுமியை ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தந்தை வேலைக்காக வெளியே சென்றுள்ளார் காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமியின் தாயார் மொட்டை மாடியில் இருந்துள்ளார்.

இந்நிலையில், லக்னோவைச் சேர்ந்த சர்வேஷ் ராவத் என்பவர், வீட்டிற்குள் புகுந்து சிறுமியை அடித்து துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

சிறுமியின் தாய் இதைப்பார்த்து மகளை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால், ராவத் அவரையும் அடித்து தள்ளிவிட்டுள்ளார். அவர், மகளைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை.

இதன்பின்னர் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், சர்வேஷ் மீது காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்வேஷ் ராவத்(32). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் தற்போது, கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related articles

Recent articles

spot_img