அச்சங்கோயில் திருவாபரணப் பெட்டி தென்காசி, செங்கோட்டை வருகை!பக்தர்கள் வரவேற்பு!

Published:

IMG 20181216 WA0046 - 2026
செங்கோட்டை பேருந்து நிலையம் முன் அச்சன்கோயில் திருவாபரணப்பெட்டி வரவேற்பளித்த பக்தர்கள் 

அச்சன்கோவிலில் உள்ள புகழ் பெற்ற ஶ்ரீஐயப்பன் கோயில் மகோற்சவ விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் கொண்ட பெட்டி நெல்லை மாவட்டம், செங்கோட்டைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

செங்கோட்டைக்கு வருகை தந்த திருவாபரணப்பெட்டி சிறப்பு பூஜைகள் செய்து  வரவேற்பளித்தனர் செங்கோட்டை வாழ் பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள். அங்கு ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

IMG 20181216 WA0047 - 2026
தென்காசி பெரியகோயில் முன் அச்சன்கோயில் திருவாபரணப் பெட்டி வரவேற்பளித்து தரிசித்த பக்தர்கள்

இதே போல தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு அச்சன்கோவில் ஐயப்பன் திருவாபரணப்பெட்டிக்கு பக்தர்கள் செண்ட மேளம் முழங்க வரவேற்பு கொடுத்தனர்.

Related articles

Recent articles

spot_img