விஷால் கைது திட்டமிட்ட சதி! ஆதரவாளர்கள் ஆவேசம்!

சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
vishal opponents cmw - 2026
விஷால் மீது புகார் மனு கொடுக்க தமிழக முதல்வரை பார்க்க தலைமைச் செயலகத்தில் காத்திருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்…

தயாரிப்பாளர்கள் சங்க விவகாரம் தொடர்பாக ஒரு தரப்பினர் அச்சங்க அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டினர். 

இந்நிலையில் இன்று அந்த பூட்டை உடைக்கும் முயற்சியில் சங்க தலைவர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். இதை தடுத்த காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார்.

vishal opponents cm - 2026
விஷால் மீது புகார் மனு கொடுக்க தமிழக முதல்வரை பார்க்க தலைமைச் செயலகத்தில் காத்திருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்…

இது குறித்து விஷால் தரப்பினர் கூறும் போது “சங்க அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டியதை காவல்துறை தடுத்திருக்க வேண்டும். அப்போது அமைதி காத்த காவல்துறையினர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான விஷால் பூட்டை திறக்க முயன்ற போது தடுத்து கைது செய்துள்ளனர். இது மிகவும் அநீதியானது. சட்டப்படி செயல்பட வேண்டிய காவல்துறை யாருக்காக இவ்வாறு செயல்படுகிறது” எனக் கேட்டனர்.

இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விஷால் எதிர்ப்பாளர்கள் சந்தித்து குறைகளை எடுத்துரைத்தனர்.

ஆனால் தீர்க்கப்பட வேண்டிய எண்ணற்ற விவகாரங்கள் இருக்கும் போது இதை முக்கிய பிரச்சினையாக கருதி ஒரு தரப்பினரை எதற்காக முதல்வர் சந்திக்க வேண்டும் என சமூக வலைத் தளங்களில் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சென்னை தி.நகர், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு எதிர் தரப்பால் போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றபோது காவல்துறையுடன் நடந்த வாக்குவாதத்தில் விஷால்,
மன்சூர் அலிகான்
உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டது. தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டை விஷால் அகற்ற போலீஸ் அனுமதி மறுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

பின்னர், சென்னை தி.நகரில் பூட்டப்பட்ட தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டு திறக்கப்பட்டது.

சென்னை தியாகராயநகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் பூட்டை பதிவுத்துறை அதிகாரிகள் திறந்தனர்; விஷால் ஆதரவாளர்களும் அலுவலகம் உள்ளே சென்றனர்.

1 thought on “விஷால் கைது திட்டமிட்ட சதி! ஆதரவாளர்கள் ஆவேசம்!”

  1. விஷால் போலீசாரால் தடுத்து அழைத்து செல்லப்பட்டது நடுநிலையாளர்களும் எடப்பாடி அரசை குற்றம் சொல்ல வலிந்து வேண்டுகின்றது. இனி யார் வேண்டுமானாலும் எந்த கட்டிடத்துக்கு வேண்டுமானாலும் பூட்டு போடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.