இந்திய மண்ணில் கொள்ளை அடிக்க 17 முறை படை எடுத்து வந்த கஜினி முகமது போல், தமிழ்ப் பாடலுக்காக அத்தனை முறை தேசிய விருது வாங்கிய தமிழ்நாட்டின் தன்மானக் கவிஞர் வைரமுத்து மீது ஒரு சிறு பெண் கூறிய பாலியல் குற்றச்சாட்டால், தமிழ்நாட்டில் எதிர்பார்த்த திசையிலேயே விவாதங்கள் களை கட்டியுள்ளன.
எந்த ஒரு சுவாரஸ்யமான டாபிக்கையும் விட்டுவைக்காத தமிழ் ஊடக உலகத்துக்கு வைரமுத்து விவகாரம் அல்வா கிடைத்தது போல் ஆகிவிட்டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியாக பாலியல் சீண்டல் குறித்த விவாதங்கள் இருக்கும் என்பதால், டிஆர்பி ரேட் எக்கச்சக்கத்துக்கும் எகிறும் என்ற காரணத்தால், பல்வேறு 24 மணி நேர உழைப்பாளிகளின் ஓய்வறியா மூளைக்குள் ப்ளாஷ் அடித்தது போல் வைரமுத்து விவகாரம் ஓடிக் கொண்டிருப்பதால், தமிழ் ரசிக நெஞ்சங்களுக்கு கிளுகிளு குளுகுளு தலைப்பில் விவாதங்கள் கிடைத்துள்ளன.
இப்படியான விவாதங்களின் தலைப்புகளை இணையத்தில் வைரலாக்கி விட்டு, ஊடகங்களுக்கு யோசிப்பதற்குக் கூட வேண்டாம் என்று இலவசமாகவே அனுப்பி வருகிறார்கள் நெட்டிசன் சிட்டிசன்கள்! அவர்கள் கொடுத்திருக்கும் தலைப்புகளும் விவாத விஷயங்களும் இங்கே….
வைரமுத்து மீது பெண் செக்ஸ் புகார் !! – தினகரன்
சுவிச்சர்லாந்தில் வைரமுத்து சின்மயிக்கு பாலியல் தொந்தரவு !! – ஜூனியர் விகடன்
வீட்டிலேயே வைத்து கட்டி அணைத்து முத்தமிட்ட வைரமுத்து !! பெண் பரபரப்பு – தினத்தந்தி
18 வயது பெண்னை பலவந்தப்படுத்த முயன்ற காமக் கொடூரன் வைரமுத்து – நக்கீரன்
வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ? நடந்தது என்ன ? இன்று இரவு 8 மணிக்கு ஆயுத எழுத்தில் – தந்தி டிவி
வைரமுத்து கவிஞரா காமுகரா – இன்றைய அக்னிப் பரிட்சை நிகழ்ச்சியில் காணத் தவறாதீர்கள். புதிய தலைமுறை
பாலியல் மிரட்டல்களில் ஈடுபட்டாரா வைரமுத்து ? – கேள்வி நேரம் – நியூஸ் 7
வைரமுத்துவை இன்னும் கைது செய்யாமல் இருப்பதன் நோக்கம் என்ன ? – டி வி 18
அடுக்கடுக்கான செக்ஸ் புகார்களில் வைரமுத்து தலைமறைவு – சன் டிவி
(வைரமுத்து மட்டும் பாஜகவிலோ, இந்துத்துவராகவோ, அதிமுககாரராகவோ இருந்திருந்தால், அத்தனை ஊடகங்களும் மேற்கண்டவாறு கொதித்து போய் செய்திகள் வெளியிட்டு விவாதங்கள் நடத்தியிருக்கும்.
நல்ல வேளை அவர் இந்து விரோதியாக இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. இப்படி ஒரு செய்தி நடந்து கொண்டிருப்பதே பாவம் ஊடகங்களுக்கு தெரியவில்லை)




