ரஜினியின் இமயமலை பயணத்தை கேலி செய்யும் அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

jayakumar - 2026

ஆன்மீக சாமியார் மலையேறி விட்டார் என்று ரஜினியின் இமயமலை பயணம் பற்றி ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர் ரஜினி காந்த், இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, தனது வழக்கமான இமய மலைப் பயணத்தை தொடங்கியுள்ளார். வருடந்தோறும் ஆன்மிக பயணமாக இமயமலைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ரஜினி காந்த். தனது அரசியல் பாதையையும் ஆன்மிக அரசியல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ரஜினியை குறிவைத்து கேலி செய்யும் விதமாக,  ஆன்மீக சாமியார் மலையேறி விட்டார் என்று ரஜினியின் இமயமலை பயணம் பற்றி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று ஜெயக்குமார் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.