பட்டயக் கிளப்பிய பேட்ட… வெளியான ஒரு நாளில் ஒரு கோடி பேர் பார்த்த டிரைலர்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
petta firstlook poster3 - 2026

யுடியூபில், வெளியான ஒரே நாளில் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர் பேட்ட டிரைலரை!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் `பேட்ட’.! ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி ரிலீசாகிறது.

பேட்ட படத்தின் டிரைலர் வெள்ளிக்கிழமை நேற்று காலை வெளியானது. படத்தில் ரஜினிகாந்த் இளமையான தோற்றத்தில் ஸ்டைலாகவும், அதிரடியாகவும் தோன்றுவது பலரையும் ரசிக்க வைத்துள்ளது. பழைய பாட்ஷா டைப் அதிரடியில் அசால்ட்டான வசனத்தில் கலக்கியுள்ள ரஜினியின் பேட்ட டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பேட்ட டிரைலர் வெளியான 12 மணி நேரத்தில் 75 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இன்று காலை பார்வையாளர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. நேற்று டுவிட்டரில் உலக அளவில் 6-வது இடத்திலும், இந்தியா அளவில் முதல் இடத்திலும் டிரெண்டாகியுள்ளது பேட்ட..!

டிவிட்டரில் கெட் ரஜினிஃபைட், சூப்பர் ஸ்டார் ரஜினி, பேட்ட பொங்கல் பராக் என ஹேஷ்டேக்குகள் இட்டு, டிவிட்டரில் டிரெண்ட் செய்யப் பட்டது. சன் பிக்சர்ஸின் டிவிட்டர் பக்கத்தில் பேட்டதான் மாஸ் காட்டியது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.